உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை ; வெளியான புதிய தகவல்

நாட்டில் தேங்காயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இது, சமீப காலத்தில் ஒரு தேங்காய் 180 ரூபாயுக்கு விற்கப்பட்ட நிலையைவிட குறைந்தகாலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய உயர்வு ஆகும்.
இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் 500 மில்லியனைத் தாண்டும் தேங்காய் அறுவடை நடைபெறும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அதன் அடிப்படையில், விலை மீண்டும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை ஏற்றத்தால், பொதுமக்களின் வீட்டு செலவிலும், உணவகங்களின் பணிச்சுமையிலும் தாக்கம் ஏற்படுவதாகக் கணிக்கப்படுகிறது.