உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பு கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 22ஆம் திகதி கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போனதைத் தொடர்ந்தும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையின் போது குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.பின்னர், அவரது சடலம் அருகிலுள்ள கால்வாயில் கொண்டு செல்லப்பட்டு வீசப்பட்டது.
இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
65 வயதான இறந்த பெண், மற்றொரு ஆணுடன் நெருக்கமாக பழகியிருந்ததாகவும், சம்பவத்தன்று அவருடன் பயணித்து வீடு திரும்பிய பின்னரே இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.