ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்காதது ஏன்? சந்தேகிக்கும் விமல் வீரவன்ச

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
யுத்தக்கால மனித உரிமை மீறல்களுக்கு சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளது.இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், அவர்களின் மேலதிகாரியான சரத் பொன்சேகாவுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை?
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாக தான் அரசியல்வாதிகள் வடக்கு பகுதிக்கு தைரியமாக சென்று வருகின்றனர்.பிரித்தானியாவின் தடை விதிக்கும் முறையில் அரசாங்கம் எந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை கண்டிக்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் விரைவில் பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.