உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் மரணிக்கவில்லை ; காவல்துறை தகவல்

இன்று அதிகாலை, கொழும்பில் சமூக ஆர்வலரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளருமான டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட தகவல்களின் படி, நான்கு தோட்டாக்கள் அவரின் மார்பு மற்றும் தோள்பட்டையில் பாய்ந்துள்ளன.
இவரது மரணம் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களுக்கு மத்தியிலும், “டேன் பிரியசாத் உயிரிழந்தார்” என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.“அவர் உயிருடன் உள்ளார், ஆனால் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமானது,” என காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த துப்பாக்கிச் சூடு நடந்த இடமான லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகம் முற்றிலும் பாதுகாப்பு வலையத்தில் கொண்டு வரப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.