உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மழையுடனான வானிலை காரணமாக, சிறுவர்களிடம் இன்புளுவென்ஸா A மற்றும் B வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளன என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் காய்ச்சல், இருமல், வாந்தி, தடிமன் போன்றன.
இன்புளுவென்ஸா A வைரஸ், குறிப்பாக குளிர்ந்த நாடுகளில் காணப்படும் வகை, சிறுவர்களிடம் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளது.
வைரஸ் மற்றோருக்கும் பரவும் அபாயம் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டால், வைத்தியரை உடனடியாக நாட வேண்டும். பரவலை கட்டுப்படுத்த, கைகளை சுத்தமாகக் கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.