உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு கனவுகள் விரக்தியாக மாறியதனால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவர்.ஆரியக்குளம் சந்திக்கு அருகிலுள்ள வளவு ஒன்றில் அவரது சடலம் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டது.பொருளாதார பிரச்சனைகள், கனடா செல்ல முடியாத நிலை, என்பவை அவரை மனதளவில் முற்றிலும் விழுங்கி விட்டதாக கருதப்படுகிறது.
யாழ்ப்பாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் வழக்கை முன்னெடுத்துள்ளார்.