உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் நண்பர்களுடன் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், அல்வாய் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாஸ்கரன் பரந்தாமன் என்ற இளைஞர், நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் கம்பர்மலை பகுதியில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞனின் இறப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.