உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தலதா மாளிகையில் விட்டுச்சென்ற பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

ஏப்ரல் 18ஆம் திகதி தொடக்கம் 27 வரை சிறி தலதா வழிபாட்டிற்காக வந்த யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பொருட்களை பெற்று, வழிபாட்டை முடித்த பின்னர் மீண்டும் ஒப்படைக்கும் பணியை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும், சில யாத்திரிகர்களின் பொருட்கள் இன்னும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய மாகாண பிரதம செயலாளர் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடாக, கண்டி வாவியோரத்தில் உள்ள நடைபாதையில் ஜோய் படகு சேவை நிலையத்தின் அருகில் இன்று (28) மற்றும் நாளை (29) அன்று பெற்றுக்கொள்ளாத பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
யாத்திரிகர்கள் தங்களது அடையாள அட்டைகளை சமர்ப்பித்து தங்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது:
-
071-580 3000
-
077-5311797
-
071-96 5890