Numerology:இந்த திகதிகளில் பிறந்த பெண்களை அனைவருக்கும் பிடிக்குமாம்… ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும்.
அதே போன்று எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்த பெண்களை அனைவருக்கும் பிடிக்குமாம். இவர்களுக்கு மற்றவர்களை விடவும் வசீகரிக்கும் தன்மை சற்று அதிகமாகவே இருக்குமாம்.
அப்படி மற்றவர்களை ஈர்க்கும் தன்மையை அதிகம் கொண்ட பெண்கள் எந்த திகதிகளில் பிறந்தவர்கள் எனவும் அவர்களின் விசேட குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம் அனைத்து மாதங்களிலும் இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் காணப்படும்.
இவர்கள் அனைவரும் விரும்பும் வகையில் ஒளிநிறைந்த முகத்தை பெற்றிருப்பார்கள். அவர்களின் இரக்க குணம் மற்றவர்கால் இவர்கள் எளிதில் ஈர்க்கப்பட காரணமாக அமைகின்றது.
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தங்களுக்கென தனித்துவமான ஒரு பாணியை கொண்டிப்பதால் இவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனியாக தெரிவார்கள்.
இவர்களிடம் மற்றவர்களை அரவணைத்துக்கொள்ளும் பண்பும் அதிகமாக இருக்கும் எனவே இவர்களிடம் பேசும் போது மற்றவர்களுக்கு ஒரு அமைதியான உணர்வு கிடைக்கும். மொதட்ததில் இந்த திகதியில் பிறந்த பெண்களை யாருக்கும் பார்த்தவுடன் பிடிக்கும்.
5, 14 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை எளிதில் ஈர்க்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையை பெரிய போராட்டமாக நினைக்காது எப்போதும் எளிமையாக எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
இவர்களின் வேடிக்கையான பேச்சு மற்றும் சுதந்திரமான செயல் என்பற்றின் காரணமாக மற்றவர்களால் விரைவில் ஈர்க்கப்படுகின்றார்கள்.
இவர்கள் யாராலும் செய்ய முடியாத விடயங்களை செய்து பார்க்க வேண்டும் எனவும் வித்தியாசமான முறையில் வாழ்வில் சாதிக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள். எப்போதும் உற்சாகமாக இருக்கும் இவர்களை அனைவருமே எளிதில் விரும்பிவிடுவார்கள்.