உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில்சிறப்பாக நடைபெற்ற பொன் விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு இன்று (29.04.2025) காலை கைலாசபதி கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் போது, கலைப்பீடத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் அதன் வரலாற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நூல் வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்களும் விரிவுரையாளர்களும் இணைந்து வழங்கிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை மேலும் சிறப்பாக்கின.
இந்நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீ சற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, கலைப்பீடத்தின் வரலாற்றுப் பயணத்தை பதிவு செய்யும் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்று, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.