உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் சிக்குன்குன்யா தீவிரமடையும் அபாயம் ; மக்களே அவதானம்

நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,709 பேர், கம்பஹாவில் 2,453 பேர் மற்றும் களுத்துறையில் 567 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள தகவலின்படி, நும்புகளால் பரவும் சிக்குன்குன்யா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் புகை விசுறுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இம்மாதத்தில் மட்டும் 18 நோய் தடுப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார அமைச்சு, மக்களிடம் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.