இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!
வத்தளை, பமுனுகம பிரதேசத்தில் இரு இளைஞர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பமுனுகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகக் கூறி பிரதேசவாசிகள் குழுவொன்று நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
ஞாயிற்றுக்கிழமை (20) பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவையில் பணிபுரியும் இடத்தில் இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 மற்றும் 24 வயதுடைய பமுனுகம மற்றும் செத்தபடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
எவ்வாறாயினும், குறித்த இளைஞர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என உறுதியளிக்கும் அதே வேளையில், இந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்கியதாக பெற்றோர்களும் கிராம மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.
பின்னர், துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டில், தாக்கப்பட்ட நபர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்படும் என துங்கல்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியளித்ததையடுத்து, குழுவினர் கலைந்து சென்றனர்.