நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு ஒரு மகிழ்ச்சித் தகவல்
பணி நிமித்தம் இஸ்ரேலுக்குப் பயணிக்கும் பணியாளர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை 75 ஆயிரம் ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் கொரிய பணிக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கான விமானப் பயணச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்ட சிலருக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானப் பயணச்சீட்டுகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
முந்தைய முறைமையில் இம்மாதம் இறுதிவரை விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய முறையினை அமல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது