போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்தாரா பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, அந்தோளன் என்ற நபருக்கு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், மனைவி அடிக்கடி ஜீன்ஸ் அணிவது தான்.
திருமணத்திற்கு முன்பே எப்போதும் ஜீன்ஸ் அணிவதை அந்த இளம்பெண் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து அணிந்து வந்துள்ளார்.
ஆனால், திருமணமான பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என அவரது கணவர் அந்தோளன் கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே நடந்த ஒரு கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்தோளன் மனைவி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், வழக்கம் போல மீண்டும் கணவன் – மனைவி இடையே தகராறு உருவாகி உள்ளது.
இந்த முறை இருவருக்கும் இடையேயான சண்டை மோசமாக செல்லவே, அந்தோளன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில், அந்தோளன் அதிகம் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், புதருக்குள் தவறி விழுந்து, உடலில் நிறைய காயங்களுடன் வீட்டிற்கு அவர் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதனால், அந்தோளனின் உடல் நிலை மோசமாக ஆரம்பிக்கவே, அவரது குடும்பத்தினர் உடனே ஜம்தாரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனிக்காமல் அந்தோளன் உயிரிழந்தார். மகனின் மரணம் குறித்து போலீசாரிடம் புகார் ஒன்றையும் அந்தோளனின் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.
ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்த தகராறில், மனைவி தான் தனது கணவரை கொலை செய்திருக்கலாம் என்றும், வெளியே அழைத்துச் சென்ற போது, ஆயுதத்தால் கணவரைக் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் அதிர்ச்சி புகார் ஒன்றை குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, சம்பவ இடம் சென்ற போலீசார், அந்த இளம் பெண் கொலை செய்திருந்தால், அதற்கான ஆயுதங்கள் கிடைக்குமா என்பதை தேடி வருகின்றனர்.
மேலும், இளைஞரின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான், அவரின் மறைவுக்கான கரணம் குறித்து தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜீன்ஸ் பெயரில் உருவான தகராறு, ஒருவரின் மரணம் வரை சென்றுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.