நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
விஜய் ரசிகர்களால் லோகேஷ் கனகராஜுக்கு ஏற்பட்ட காயம்.. என்ன நடந்தது தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் லியோ படம் வெளிவந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இப்படத்தில் தளபதி விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க கேரளாவிற்கு சென்று இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அங்கு ரசிகர்களை சந்தித்துவிட்டு பதிக்கையாளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கிய லோகேஷுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயத்தை சரி செய்தபின் மீண்டும் கேரளாவிற்கு வந்து உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் ‘கேரளாவின் அன்புக்கு நன்றி. பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால், மற்ற இரண்டு இடங்களுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் கேரளாவில் சந்திக்க நிச்சயமாக வருவேன். அதுவரை இதே அன்புடன் லியோ படத்தை ரசித்துக்கொண்டே இருங்கள்’ என பதிவு செய்துள்ளார்.