ஈரான் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க தயாராகும் ஜப்பான்
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை கண்டிப்பதாகவும், மேலும் நிலைமையைத் தணிக்க அமெரிக்காவுடன் ஒரு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.
அது ஒரு முழுமையான போராக மாறுவதைத் தடுக்கவும் ஒத்துழைப்பை வழங்க காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதைத் தவிர்க்கும் முயற்சிகளுக்கு அவர் ஆதரவளிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்த தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இஷிபா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து ஒத்துழைக்க விரும்புகிறோம் எனவும், மேலும் நிலைமையைத் தணிக்கவும், அது ஒரு முழுமையான போராக மாறுவதைத் தடுக்கவும் ஒத்துழைப்பை வழங்க காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, அந்நாட்டு மக்கள், முகாம்களுக்குள் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை தொடர்ந்து, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவை விமானப்படை மூலம் இஸ்ரேல் குண்டு வீசி கொலை செய்தது.
இந்நிலையில் லெபனான் தெற்கு எல்லையில், இராணுவத்தினரை குவித்த இஸ்ரேல், ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதலை துவக்கி உள்ளது.