ரோகித் – விராட்டுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை..போகவே முடியாது என இருக்கும் இந்தியா!!

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்ல திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஐசிசி கோப்பைகளில் ஒன்றான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. பிப்ரவரி – மார்ச்சில் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.
2017-ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இப்பொது ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் உள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை தயார் செய்துள்ள பாகிஸ்தான் நிர்வாகம் அதனை சமர்ப்பித்துள்ளது.
அதில், இந்தியாவிற்கான போட்டிகள் மொத்தமும் லாகூரில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அணி நிச்சயமாக இம்முறை பாகிஸ்தான் சென்று தொடரில் விளையாடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இந்திய அணி தரப்பில் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை.
பாதுகாப்பது காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அணி நிர்வாகம் போட்டி பொதுவான ஒரு இடத்தில் நடைபெறவேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது இதில் குறிப்பிடத்தக்கது.