போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உட்பட சக வீரர்கள் இந்தாண்டு இறுதி வரை பூமிக்குத் திரும்பமுடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் 5ஆம் திகதி விண்வெளி சென்ற நிலையில் அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய அவர்கள், 2 மாதங்களாகியும் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
இந்த நிலையில், அவர்கள் தற்போது பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்த வண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.