உலகை உலுக்கிய நிகழ்வுகள் ஒரே பார்வையில்… யாழில் உகல பத்திரிகை புகைப்பட கண்காட்சி!

சர்வதேச பத்திரிகை புகைப்பட கண்காட்சி இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி இன்று யாழ்பாணத்தில் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகிவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.
கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இந்த கண்காட்சி இம்மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து இந்த கண்காட்சி இலங்கையில் பல இடங்களிலும் ஒழுங்குசெய்யப்படவுள்ளது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 27 ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை பார்வையிடலாம்.
ஆயிரம் வார்த்ததைகளால் சொல்ல முடியாத விடயதியை ஒற்றை புபைப்படம் செல்லும் என்று சொல்லுவார்கள் அப்படி உலகை உலுக்கிய பல நிகழ்வுகளை இந்த கண்காட்சியில் புகைப்பட வடிவில் காணக்கூடியதாக இருக்கும்.
குறித்த உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.