நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்தை தொடர்ந்து Basist மோகினி செய்த வேலை- சந்தேகத்தை தூண்டிய பதிவு
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்தை தொடர்ந்து Basist மோகினி போட்ட பதிவு சந்தேகத்தை துண்டியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பணியாற்றி வரும் ஈமான், ஜிவி பிரகாஷ் ஆகியோர் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியொரு சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏ.ஆர் ரகுமான் அவருடைய காதல் மனைவி சாய்ராவை பிரியப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இவர், தென்னிந்திய சினிமாவில், மூத்த இசையமைப்பாளராக, மிகச்சிறந்த மனிதனாக திகழ்ந்து வந்தார். பல மேடைகளில் இவர் மனைவி மீதுள்ள காதலை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தயிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன்னுடைய கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த சில மாதங்களாகவே ரகுமான் மற்றும் சாய்ரா இடையே உணர்ச்சி பூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்ததாகவும். இந்த சூழலில் சாய்ரா கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிட்டிருக்கிறது என்றும் ரகுமானை பிரிந்து அவர் வாழ உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பாடகி மோகினி டேவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கணவர் மார்க்கை பிரிவதாக அறிவித்துள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த 28 வயதான இவர் கொல்கத்தாவில் இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியளவில் பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
அதில், “ இருவரும் ஒரு மனதாக விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருந்தாலும், தொடர்ந்து இசைத்துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்..” என்பதனையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மோகினி டே பொதுவெளியில் தனது பிரேக்கப் குறித்து அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து செய்தியுடன் இந்த விவகாரமும் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.