கின்னஸ் உலக சாதனையை தட்டி தூக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி- எதுக்கு தெரியுமா?
தமிழ் சினிமா போல் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
இவர் ரீமேக் படங்களுக்கு பெயர் போன நடிகர். இவர் நேரடியாக நடித்த திரைப்படங்கள் படுத்தோல்வியடைந்த காரணத்தினால் ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அதிலும் சிரஞ்சீவிக்கு ஆக்ஷன், சென்டிமென்ட் படங்கள் சிறந்தஒரு இடத்தை தெலுங்கு சினிமாவில் எடுத்து கொடுத்தது.
இதற்கிடையில் சிரஞ்சீவி நடிகர் ராமலிங்கய்யாவின் சகோதரி சுரேகாவை 1980ம் ஆண்டு மணந்தார். இந்த தம்பதியருக்கு ராம் சரண், ஸ்ரீஜா, சுஷ்மிதா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி உலக சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. இது தொடர்பான விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இதன்படி, நடிகர் சிரஞ்சிவி கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார்.
இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சிவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா- ஹைதராபாத்தில் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய புகழ் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
சிரஞ்சிவியின் சாதனை குறித்து பேசிய அமீர் கான், “ உங்களை போல நானும் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன் தான். இந்த நிகழ்ச்சி குறித்து என்னிட்ட கேட்ட போது, உடனே ஒப்புக் கொண்டேன். சிரஞ்சீவி சார் ஆடிய பாடல்களின் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். திறமையான நடன கலைஞர். இவர் ஒரு தனித்துவமான திறமைக் கொண்டவர்..” என புகழ்ந்து பேசியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.