நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சிறுமி செல்லமாக வளர்த்த ஆடு; 3 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 11 வயது சிறுமி செல்லமாக ஒரு ஆட்டை வளர்த்து வந்தாள். அதை கண்காட்சிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பது அந்த சிறுமியின் எண்ணமாக இருந்தது.
எனினும் குழந்தைகளுக்கு விவசாய, சமூக திறன்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு திட்டத்தின் கீழ் அந்த ஆடு சிறுமிக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த ஆட்டை திட்ட அதிகாரிகள் பெற்றுச் சென்றுவிடுவார்கள்.
ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். செல்லமாக வளர்த்த ஆட்டை ஏலத்திற்கு கொடுக்க சிறுமிக்கு மனம் வரவில்லை. ஆனால் திட்ட அதிகாரிகள் ஒப்பந்தப்படி ஆட்டை அழைத்துச் சென்று ஏலத்தில் விட்டு விற்றுவிட்டனர்.
ஆனால் அன்றைய தினம், சிறுமி மேஜைக்கு அடியில் படுத்து அழுதுபுரண்டாள். அவளை பெற்றோரால் சமாதானப்படுத்த முடியவில்லை. ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.
ஏலமிடப்பட்ட ஆடு பலியிடப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் தாய், ஏல நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.
பலியான ஆட்டிற்காக 3 லட்சம் அமெரிக்க டாலர் சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.