நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சௌந்தர்யா ஆட்டத்தை அடக்கிய விஜய் சேதுபதி.. இந்த வாரம் வெளியேறுவது உறுதி- நடந்தது என்ன?
இந்த வாரம் சரியாக விளையாடவில்லை என்ற பட்டியலில் செளந்தர்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.
கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள்.
தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஆறு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஐந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், இன்றைய தினம் கடந்த நாட்களில் சரியாக விளையாடாத இரண்டு போட்டியாளர்களை தெரிவு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், பெரும்பான்மையினரால் சௌர்ந்தர்யா மற்றும் சிவா இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் சிறப்பாக விளையாடி சௌந்தர்யாவை விஜய் சேதுபதி கண்டித்த பின்னர் தான் இவ்வாறு விளையாடாமல் இருக்கிறாரா? என அவரின் ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.