நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென உயிரிழந்த இளைஞன்
தேர்தல் பிரச்சாரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே இளைஞன் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் இரத்தினபுரி -இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இளஞனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது