இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
நியூஸிலாந்து மகளிர் அணியுடன் தோல்வியடைந்த இந்திய அணி
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின், மகளிருக்கான 20 க்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 58 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
துபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றது.
இதில் அணித்தலைவி டெவின் 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தநிலையில், 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
இதேவேளை இன்று அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.