புதிய ஜனாதிபதி அநுரவின் தனிப்பட்ட செயலாளர் நியமனம்!
இலங்கையில் நடந்து முடிந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் கொழும்பில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.