ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
மாத இறுதிக்குள் 12,000 ஆசிரியர்கள் இடமாற்றம்!

இலங்கையில் ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ளார்.
அதன்படி தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் பலர் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றியவர்கள் எனவும் சிலர் நீண்ட காலமாக தூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிப்பவர்கள் என்றும் ஜோசப் ஸ்டாலி சுட்டிக்காட்டியுள்ளார்