மினுவாங்கொடை விபத்தில் பலர் காயம்

கிரியுல்ல – மினுவாங்கொடை வீதியில் பரவாவில சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதியதால், வேனானது வீதியில் கவிழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, வேன் மற்றும் காரில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.