வதந்தியாக பரவியதை உண்மையாக்கிய கீர்த்தி சுரேஷ்! திருமணம் எங்கே தெரியுமா?
கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது வருங்கால கணவர் ஆண்டனி இருவரும் திருமணம் செய்யப்போகும் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் தனது 15 வருடக்காதலரான ஆன்டனி என்பவரை திருமணம் செய்வது பற்றி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் ஆன்டனியை கோவாவில் உள்ள டெஸ்டினேஷன் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் பரவின.
இது குறித்து கீர்த்தி சுரேஷின் தரப்பில் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது தான் திருமணம் செய்து கொள்ளும் இடம் பல நாள்களாக வதந்தியாக வந்த கோவாவில் உள்ள டெஸ்டினேஷன் தான் என அவர் கூறியுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து கோவா செல்லும் டிக்கட்டுக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இரண்டு டிக்கெட்டுகளில் ஆண்டனி தட்டில் மற்றும் கீர்த்தி சுரேஷின் பெயர்கள் பயணிகளாக இருந்தன.
இதற்கு முன்பு கீர்த்தி மற்றும் ஆண்டனியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகிய நிலையில் இருவருக்கும் டிசம்பர் 12 ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. இதை கீர்த்தி சுரேஷ் ஒரு ரசிகர்களின் கூட்டத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.