நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம்… 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 111 குடும்பங்களை சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களை சேர்ந்த 641 பேர் வெள்ள அணுத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் செய்த அடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களை சேர்ந்த 494 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு கொண்டும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.