நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை
கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகளிலும் கிளை வீதிகளிலும் பயணிக்கும் வாகன சாரதிகள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தனது வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.