உலகின் முதல் தங்க ATM ; எங்குள்ளது தெரியுமா?

தங்க நகை மற்றும் நாணயங்களை எளிதாக பணமாக்கும் புதிய தீர்வாக, சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதலாவது தங்க ATM இயந்திரத்தை ‘சைனா கோல்ட்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ATM, பழைய தங்க நகையை எடை போட்டு அதன் மதிப்பை கணித்து திரையில் காட்டும். வாடிக்கையாளர் ஒப்புதல் அளித்ததும், தங்கம் உருக்கப்பட்டு அதன் மதிப்புக்கேற்ப பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த தங்க ATM, சீன மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கத்தின் தரத்தையும் பரிசோதித்து, சந்தை விலைக்கு ஏற்ப பணம் வழங்கப்படுவதால், நஷ்டமின்றி தங்கத்தை பணமாக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ATM இயந்திரம் தினசரி தங்கத்தின் விலையை திரையில் காட்டும் வசதியையும் வழங்குகிறது. இது, தங்கத்தை விற்பதற்கான குழப்பங்களைத் தவிர்க்க உதவுகிறது என்றும், சைனா கோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.