OnePlus 13 வருகையால் அதிரும் போகும் ஸ்மார்ட்போன் சந்தை! வெளியிட்டு திகதி குறித்த முக்கிய தகவல்
OnePlus தனது சமீபத்திய ஸ்மார்ட்போன OnePlus 13-ஐ அடுத்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதே நேரம் OnePlus 13-யின் சர்வதேச அறிமுகம் சிறிது காலம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பகமான தொழில் வட்டாரங்களின் கூற்றுப்படி, OnePlus 13 அதன் முன்னோடி OnePlus 12-ஐப் போல 24GB LPDDR5X RAM-ஐ வழங்கும்.
OnePlus 13 Qualcomm இன் Snapdragon 8 Gen 4 அல்லது MediaTek இன் Dimensity 9400 ஆகியவற்றால் இயக்கப்படும்.
அத்துடன் 100W வயர் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பற்றரியை OnePlus 13 கொண்டிருக்கும்.
மேலும் புதிய ஸ்மார்ட்போன் OnePlus 12 இன் வைப்ரேஷன் மோட்டார் மற்றும் முக்கிய கேமரா அம்சங்களை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பக்கங்களிலும் வளைந்த வடிவமைப்புடன் 6.8-இன்ச் 1440×3168 ஆக திரை இருக்கலாம்.
சாதனம் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் மற்றும் மேம்படுத்தப்பட்ட நீர் எதிர்ப்பு தரவரிசையுடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.