நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Today Gold Price: உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…. இன்று சவரன் எவ்வளவு?
ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ள நிலையில் இன்றும், அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.7,090 ஆகவும் சவரன், ரூ.56,720 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, 7,160 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 560 அதிகரித்து, 57,280 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் 55 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது அதைவிட அதிகரித்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.100.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,00,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.