உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திக்குமுக்காடும் அமெரிக்க அரசியல் ; டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகி விடுவாரா?

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக புதிய துறையை உருவாக்கினார். இந்த துறையின் செயல் தலைவராக உலகப்பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’ நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்தார்.
நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில், எலான் மஸ்க் பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மஸ்க் தலைமையிலான துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால், அமெரிக்க அரசுக்கு ஒருநாள் செலவிலிருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை சேமிப்பு ஏற்பட்டது.
எலான் மஸ்க், டிரம்புடன் இணைந்து செயல்படும் காரணமாக, அவரது டெஸ்லா நிறுவனம் உள்ளிட்ட பங்குகளின் மதிப்பில் குறைவு ஏற்பட்டது. கடந்த இரு நாட்களில், டெஸ்லாவின் லாபம் 20 சதவீதம் வரை குறைந்தது.
இதன் பின்னணியில், எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இருந்து வெளியேறி, தனது நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பங்காற்ற முடியுமெனத் தெரிவித்தார். அடுத்த மாதம் (மே) முழுவதுமாக டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகி விடுவேன் என்றும் அவர் கூறினார்.