பூமியை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருக்கும் சிறுகோள்! நாசாவின் அதிர்ச்சி தகவல்

பூமியை நோக்கி 2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிறுகோள் சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கோள் நாளை சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் எனவும் இது பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது.
மேலும் இதன் பாதிப்பு குறித்து நாசா தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.