துயர செய்தி – திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தி

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி விநாயகமூர்த்தி அவர்கள் 25-01-2023 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலகர் கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற முருகர் காசிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற மகாஜனர்களான சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, இராசநாயகம் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோரின் அருமை சகோதரியும்,காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கந்தையா, சின்னாச்சிப்பிள்ளை வைத்திலிங்கம், தங்கப்பிள்ளை கனகசபை, கதிராசிப்பிள்ளை கந்தையா, கமலாம்பிகை சுப்பிரமணியம் மற்றும் சிவபாக்கியம் திருநாவுக்கரசு, காலஞ்சென்ற இராஜேஸ்வரி இராசநாயகம், இராஜேஸ்வரி ஜீவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,இராஜேஸ்வரி சண்முகரத்தினம்(மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர்), சிவனேஸ்வரி சிவானந்தா, விநாயகமூர்த்தி கணேசலிங்கம், யோகேஸ்வரி விநாயகமூர்த்தி, ஞானேஸ்வரி பாக்கியகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான கந்தையா சண்முகரத்தினம், மாணிக்கவாசகர் சிவானந்தா மற்றும் மனோரஞ்சினி கணேசலிங்கம், வன்னியசிங்கம் பாக்கியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராஜீவதனி, ராஜீவன், கீர்த்தனா, வருணன், பிரணவன், ஆதவன், கேசவன், குணாளினி, சசிகுமார், கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அனுஜன், பானுஷா, ஹவினாஷ், ஆசனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.