யாழ்.கடற்கரை ஒன்றில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைக் கடலில் உயிரிழந்த நிலையில் பெரியளவிலான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்றையதினம் (01-02-2023) பொன்னாலை பாலத்திற்கு அருகில் குறித்த ஆமை கரை ஒதுங்கியுள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஆமை உயிரிழந்து கரையொதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.