எரிபொருள் தொடர்பில் புதிய நடைமுறை!
எரிபொருள் விலைகள் தொடர்பாக புதிய நடைமுறை ஒன்றை அரசாங்கம் பின்பற்றவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அடுத்த மாதம் முதல் 3 தனியார் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடவுள்ளன.
இந்த நிறுவனங்களையும் சேர்த்து மொத்தமாக 5 நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் வணிகத்தில் ஈடுபடும்.
அதன்படி அவற்றுக்கான எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பாக உயர்ந்த பட்ச மற்றும் குறைந்த பட்ச விலைகளை அமுலாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இந்த இரண்டு விலைகளும் மாதாமாதம் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படும் எனவும், அந்த விலை இடைவித்தியாசத்துக்குள் குறித்த நிறுவனங்கள் தங்களது எரிபொருள் விலையை நிர்ணயித்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.