நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இயற்கையின் கோர தாண்டவத்தால் யாழில் 44 ஆயிரம் பேர் பாதிப்பு
யாழில் கொட்டித்த்தீர்த்த அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை 09.00 மணி நிலவரப்படி 13,117 குடும்பங்களைச் சேர்ந்த 44,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 131 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் சீரற்ற வானிலை காரணமாக, 68 பாதுகாப்பு நிலையங்களில் 1,700 குடும்பங்களைச் சேர்ந்த 6,031 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.