ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திரு வேலுப்பிள்ளை நடராஜா

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி, கிளிநொச்சி, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், விடத்தல்தீவை வசிப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான குணசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணப்பிள்ளை, உமையம்மை, இராமலிங்கம், துரைமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி, நவதீபன், உதயதீபன், ஜெயதீபன், குமுதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீதரன், ரேணுகா, ரஜினா, பிரபாசினி, அகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாதுரியன், நாவீனன், சரநிதா, தியானா, சஞ்சனா, ஆதனா, மதுரினா, அரிஸ், அபினா, அனேகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கணபதிப்பிள்ளை மற்றும் கந்தசாமி, தவமணி, வன்னியசிங்கம், அற்புதமலர், ஜெயந்தீஸ்வரி, ரதீஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகராணி, சிவகுமார், ஜெகநாதன், சிவானந்தம், காலஞ்சென்ற பிறேமநாதன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.