நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மீண்டும் வழமைக்கு திரும்பிய யாழ்ப்பாணம் ஏ9 வீதி
சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவில் வெள்ள நீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வெள்ள நீர் குறைவடைந்துள்ளதால் யாழ்ப்பாணம் ஏ9 வீதி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.