யாழில் 10ஆம் ஆண்டு நினைவாக வன்முறைக் கும்பல் நிகழ்வு; பொலிஸார் தீவிர நடவடிக்கையில்!

யாழ்ப்பாணத்தில் செயல்படும் வன்முறைக் கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
இந்த காணொளியை பதிவேற்றிய 22 வயதான நவாலி பகுதியை சேர்ந்த இளைஞர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் யாழில் வன்முறைக் கும்பல்களால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.