இந்த பழக்கம் கொண்டவர்கள் வாழ்வில் பணம் சம்பாதிக்கவே முடியாதாம்… எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியின் பிரகாரம் குறிப்பிட்ட சில பழக்கங்களை கொண்டவர்கள் வாழ்வில் ஒருபோதும் நிதி ரீதியில் முன்னேற்றம் அடையவே முடியாது என எச்சரித்துள்ளார். அப்படி வாழ்வில் அதிக பணம் சம்பாதிப்பதற்கு எவ்வாறான பழக்கங்கள் தடையாக இருக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒருவர் நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் இவரால் வாழ்வில் எந்த நல்ல விடயத்தையும் செய்யவே முடியாது.
நேரத்தை வீணடிப்பவர்களாக இருந்தால், அவர்கள் நிதி ரீதியாக ஒருபோதும் முன்னேற்றம் அடையவே முடியாது. நேரத்தின் அருமை தெரிந்தவர்கள் மாத்திரமே வாழ்க்கை பற்றிய உண்மையான புரிதலை கொண்டிருக்க முடியும்.
நேரத்தை சரியான வகையில் பயன்படுத்தினால் தான் வாழ்வில் நிதி ரீதியில் முன்னேற்றம் அடைய முடியும். என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சுகாதாரமற்றவர்களால் வாழ்வில் மகிழ்ச்சியையும் உண்மையான திருப்தியையும் ஒருபொதும் அனுபவிக்கவே முடியாது
அவர்களிடம் பணம் இருந்தாலும் அதனால் அவர்களுக்கு மகிழ்சி கிடைக்காது என்கின்றார் சாணக்கியர்.
வாழ்க்கையில் வெற்றிபெற தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதுமன் நிதிரீதியான தன்னிறைவை அடைய வேண்டும் என்றால் தூய்மையின் முக்கியத்துவம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் செல்வத்தை வழங்கும் கடவுளாக கருதப்படும் மகாலட்சுமி அசுத்தம் நிறைந்த இடங்களில் ஒரு போதும் தங்க விரும்புவதில்லை.
இதனால் சுகாதாரமற்ற முறையில் வாழும் எவறாலும் நிதி ரீதியில் வெற்றியை காண முடியாது மகாலட்சுமி இவர்களை திரும்பியும் பார்ப்பதே இல்லை.
சாணக்கிய நீதியின் பிரகாரம் மற்றவர்களை அவமதிக்கும் குணம் கொண்டவர்களால் ஒருபோதும் எந்தவொரு நல்ல காரியத்தையும், சாதனையையும் செய்யவே முடியாது.
இவர்களின் இந்த குணத்ததால் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளையும் இடர்களை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் பணம் தங்குவதில்லை என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான பழக்கங்களை கொண்டவர்கள் இருந்தால் இதனை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லாவிடில் வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.