நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த முக்கிய அரசியல்வாதிகள்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியாக தற்போது வெளியாகி வருகின்றன.
குறித்த தேர்தலில் அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.
இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல முக்கிய உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர்.