உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண பல்பொருள் அங்காடிக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம்!

யாழ்ப்பாணம் கோண்டாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனைக்காக வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அங்காடியின் உரிமையாளருக்கு ரூ.40,000 தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த குற்றம் கண்டறியப்பட்டது. இக்குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 29) வழக்கை விசாரித்து, அவரை கடுமையாக எச்சரித்து ரூ.40,000 தண்டம் விதித்தது.
இதேபோன்ற பரிசோதனைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இதன் மூலம் பொது சுகாதார பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.