ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?
இலங்கையில் உள்ள 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.
தற்போது இப்படியொரு வாட்ஸ்ஆப் செய்தி பலவிடங்களில் பதியப்பட்ட பதிவு & அநுரவின் அதிரடி – 23 புதிய சட்டங்கள் இந்தத் தலைப்பில் சில பதிவுகள் & காணொளிகள் இவற்றை எழுதியவர்/அல்லது எழுதியவர்கள் யாரென்று தனக்கு உடனடியாகக் கண்டறிந்து தருமாறும்,
அவர்களுக்கு கட்சியில் உத்தியோகபூர்வ பதவி வழங்கி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனங்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கி அழகு பார்க்க ஜனாதிபதி அநுர ஆசைப்படுவதாக தற்போது ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
எனினும் இவ்வாறான ஒரு அறிக்கை அராசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்தோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவே வெளியிட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லையென தெரியவருகின்றது.