திருமதி சின்னதுரை தங்கமுத்து (அன்னம்) – துயர செய்தி

யாழ். வறணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கமுத்து அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகர், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவராசா(சிவம்- லண்டன்), சரஸ்வதிப்பிள்ளை(சித்ரா- கொலண்ட்), மல்லிகா(லண்டன்), காலஞ்சென்ற அம்பிகைபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சரஸ்வதி, காலஞ்சென்ற தங்கம்மா, இலக்ஷ்மிபிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற செல்லர் மற்றும் இளையதம்பி, இராசையா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,முகுந்தினி(லண்டன்), பாமராஜா(கொலண்ட்), உதயகுலம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,டிரோஜன், சனுஜன், ஜனுஷா, டினுஷா, விதுஷா, அம்ஷா, அக்ஷயா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.