திரு ஸ்ரனிஸ்லொஸ் பஸ்தியாம்பிள்ளை – துயர செய்தி

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஸ்தியாம்பிள்ளை ஸ்ரனிஸ்லொஸ் அவர்கள் 15-11-2022 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துத்தம்பி பஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவிரிமுத்து, பிரிஜட்ரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிலோமினா அவர்களின் அன்புக்கணவரும்,றொசிற்ரா மரியதாஸன்(ஐக்கிய இராச்சியம்), ரோய் டனிஸ்ரன்(கனடா), ரெக்ஸ் டோல்ரன்(அவுஸ்திரேலியா), மேர்லின் அசம்ரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அன்ரனிப்பிள்ளை மரியதாஸன்(ஐக்கிய இராச்சியம்), அன்ரனற் ஸ்ரனிஸ்லொஸ்(அவுஸ்திரேலியா), ஜூட் அரியனாயகம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,டரோல்ட், மைக்கல், கிரிஸ்ரினா, கத்தறின், குலோடியா, மெலனீ, ஜெஸ்லின் ஆகியோரின் பாசமிகு பேரனும்.காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், அந்தோனிப்பிள்ளை, அமிர்தநாயகம், கில்பேட் மற்றும் Rev Sr அன்ரனிற்ரா (Holy Family Convent, Jaffna), சேவியர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பொனிபஸ், வயலற், மரியதாஸ் மற்றும் அனற் ஸ்ரெலா, இவாஞ்சலின்(ஈசு) இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.