துயரச்செய்தி – திருமதி இராஜேஸ்வரி முத்தையா
வட தமிழீழம் யாழ். தென்மராட்சி தனங்கிளப்பை பிறப்பிடமாகவும், தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி முத்தையா அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து முத்தையா(மார்க்கண்டு, ஓய்வுநிலை தபால் உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, விஜயரத்தினம்(தனங்கிளப்பு, ஓய்வுநிலை மின்சாரசபை உத்தியோகத்தர்), காலஞ்சென்றவர்களான குலராசரத்தினம், ஞானாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான குமாரவேலு, இரத்தினம்மா, ஞானாம்பிகை, சிவகுரு, கனகலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
முருகதாசன்(கனடா), துஷ்யந்தி(கனடா), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சித்திரா, ஜெயக்குமார், காலஞ்சென்ற பகீரதன், விஜிதா(இலங்கை), சசிதா(இலங்கை), கார்த்திகன்(இலங்கை), ஜெகதீசன்(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), ஜெயபாலன்(கனடா), ஜெயபரன்(கனடா) ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குகநேசன், கணேசன்(அவுஸ்திரேலியா), சிவநேசன்(கனடா), பவானி(கனடா) ஆகியோரின் சித்தியும்,
வல்லபை (இலங்கை), கஜேந்திரா(அவுஸ்திரேலியா), சரத்சந்திரா, உத்தரை(ஐக்கியராச்சியம்) ஆகியோரின் பெரியம்மாவும்,
மிதுரன், மிதுரா, யதுசன், விதுசன், பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.